பரிசு விழுந்திருப்பதாக கூறி தங்கள் செல்போன்களுக்கு வரும் எஸ்எம்எஸ்களை நம்பி ஏமாற வேண்டாம் -போலீஸ் அறிவுரை!
திருச்சி, அக். 7:
பரிசு விழுந்திருப்பதாக கூறி தங்கள் செல்போன்களுக்கு வரும் எஸ்எம்எஸ்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருச்சி மாநகர பொரு ளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக வட்டி தரு வதாக கூறி சில போலி நிதி நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்கிறார்கள். இதனை நம்பி பொது மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி மற் றும் அதிகார அமைப்புக ளின் அங்கீகாரத்தை பெற்று இருப்பதாக கூறி, அதற்கு ஆதாரமாக போலி யான சின்னங்களையும் பயன்படுத்துகிறார்கள். இது போன்றவற்றை நம்பி அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்.
24 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வட்டி தரு வோம் என்றால் அது எப் படி நடைமுறைக்கு சாத்தியமாகும் என்பதை பொதுமக்கள் யோசிக்க வேண்டும். பணம் கட்டும் முன்பு சற்றே சிந்தித்தால் ஏமாற்றதை தவிர்க்கலாம்.
தற்போது இணையத ளம் மூலம் இ&மெயி லிலும், செல்போன்கள் மூலம் நிறைய மோசடிகள் நடப்ப தாக புகார்கள் வருகின்றன. உங்களுக்கு பல லட்சம் பரிசு விழுந்துள்ளது என செல்போனில் எஸ்எம்எஸ், இ&மெயில் வரும். அதிலும் பரிசு தொகை டாலர் மதிப் பாக சிலவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் பரிசீலனை தொகை 20 ஆயிரம் முதல் 1லட்சம் அனுப்புங்கள் என்று இருக் கும். அப்படி இருந்தால் அது மோசடி என புரிந்து கொண்டு அதில் சிக்கி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள் ளது.
Category: மாநில செய்தி


0 comments