.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஹை-டெக் வேலை தேடுகிறீர்களா..?

Unknown | 9:50 PM | 0 comments

அப்ப இந்த 10 தகுதி உங்ககிட்ட இருக்கணும் ….!
வேலை வேண்டும் என்றால் உங்களிடம் இந்த 10 தகுதிகள் இருக்க வேண்டும். என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். பலர் படித்த படிப்பு ஒன்றாக இருக்கிறது பார்க்கும் வேலை ஒன்றாக இருக்கிறது.

வேலை வேண்டும் என்றால் உங்களிடம் குறைந்தபட்சம் இந்த 10 தகுதிகள் இருக்க வேண்டும்.
அவை என்னவென்று பார்ப்போம்.
சிந்தனை
லாஜிக்கை பயன்படுத்தி ஒரு தீர்வின் நன்மை, தீமைகளை கண்டுபிடிக்கும் சிந்தனை திறன் நிச்சயம் தேவை.
பிரச்சனை
சிக்கலான பிரச்சனைகளை கண்டுபிடித்து அவற்றை ஆய்வு செய்து தகுந்த தீர்வை கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் திறன் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும்.
முடிவு எடுப்பது
வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சரியான முடிவு எடுப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
கவனிக்கும் திறன்
பிறர் கூறுவதை உன்னிப்பாக கவனித்து அதை புரிந்து கொண்டு, சரியான கேள்விகளை கேட்கும் திறன் வேண்டும். மேலும் பிறர் பேசும்போது அவர்களை பேசவிடாமல் இடையிடையே தேவையில்லாத கேள்விகளை கேட்டு எரிச்சலடைய வைக்காமல் இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்
சர்க்யூட் போர்டுகள், ப்ராசஸர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் என கம்ப்யூட்டர் ஹார்டுவேர் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கணக்கு
அரித்மேடிக், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, கால்குலஸ், புள்ளி விவரம் உள்ளிட்டவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
செயல்பாடு மற்றும் சிஸ்டம்ஸ் அனாலிசிஸ்
ஒரு சிஸ்டம் அல்லது ஆபரேஷன் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஆபரேஷன்ஸ் மற்றும் சூழல் மாற்றத்தால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை கணிக்கத் தெரிய வேண்டும். ஒரு குறிப்பிட்ட டிசைனின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
கண்காணித்தல்
பிறர் அல்லது நிறுவனம் மற்றும் உங்களின் செயல்பாடுகளை கண்காணித்து கணித்து அதை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
புரோகிராமிங்
கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
சேல்ஸ், மார்க்கெட்டிங்
பொருட்கள், தயாரிப்புகளை விற்றல், சந்தையில் விளம்பரப்படுத்தும் கலை தெரிந்திருக்க வேண்டும். தயாரிப்புகளின் சிறப்பு தன்மைகளை விளக்கும் திறமை வேண்டும். விற்பனை நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1