சென்னை- மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் நேற்று தொடங்கியது.
சென்னை, அக். 24:
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் நேற்று தொடங்கியது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து புனித தோமையார் மலை வரையும் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதை 2015 இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட (மேம்பாலம்) பாதையில் கோயம்பேட்டில் இருந்து புனித தோமையார் மலை வரை 11 கி.மீ. தூரத்துக்கு 2014 மத்தியில் ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் & கே.கே.நகர், சிட்கோ, ஆலந்தூர் மற்றும் புனித தோமையார் மலை பகுதி வரை 95 சதவீதம் மேம்பால பணி முடிந்து விட்டது. அங்கு ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு & புனித தோமையார் மலை வரை உள்ள தண்டவாளத்தில் சோதனை முறையில் ஓட்ட பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனை யில் 4 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 மாதம் ஆய்வு செய்ய முடிவு...
Category: மாநில செய்தி


0 comments