.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நடப்பாண்டில்(2013-2014) 5.65 லட்சம் இலவச லேப்-டாப்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு!

Unknown | 9:23 PM | 0 comments

நடப்பு நிதியாண்டில் 5.65 லட்சம் இலவச லேப்டாப்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இலவச லேப்டாப் உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 9.07 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள்
அளிக்கப்பட்டன. மேலும், கடந்த நிதியாண்டில், 7.56 லட்சம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 90 சதவீத மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டிலும் 5.65 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப்கள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட்டிடம் லேப்டாப்கள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களில் விநியோகிக்கப்பட இருக்கும் லேப்டாப்களின் எண்ணிக்கை, சேவை மையங்கள், லேப்டாப்களை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் சாந்தினி கபூர், கவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1