.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

திருவாலந்துறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 8 பவுன் தாலி சங்கிலி பறிப்பு!!

Unknown | 9:30 PM | 0 comments



வேப்பந்தட்டை,அக்.10-

வி.களத்தூர்  அருகேயுள்ள திருவாலந்துறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத் திலிருந்த 8 பவுன் தாலி சங்கிலியைபறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டு திண்ணையில்

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர்  அடுத் துள்ள திருவாலந்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50 ).விவசாயி.

இவரது மனைவி முத்து லெட்சுமி (வயது45). இருவரும் நேற்று முன்தினம் இரவு மின்தடை காரணமாக வீட்டினுள் போதிய காற்றோட் டம் இல்லாமல் இருந்ததால் அவர்கள் வீட்டுத் திண்ணை யில் படுத்து தூங்கி கொண்டி ருந்தனர்.

தாலி சங்கிலி பறிப்பு

அப்போது மர்மநபர்கள் 2 பேர் நைசாக வந்து தூங்கி கொண்டிருந்த முத்து லெட்சுமி யின் கழுத்தில் அணிந்திருந்த ரூ 2 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி அருகிலிருந்த காட்டிற்குள் மறைந்து கொண்டனர்.

சங்கிலியை பறிகொடுத்த முத்துலெட்சுமி திருடன், திருடன் என கத்தி கூச்ச லிட்டார். உடனடியாக கணவர் செல்லமுத்து மற்றும் அக்கம் பக்கத்தினர்கள் எழுந்து திருடன் ஓடிய திசையை நோக்கி ஓடி தேடி பார்த்தும் திருடன்களை பிடிக்கமுடியவில்லை.

இதனை தொடர்ந்து வி.களத்தூர் போலீசில் செல்ல முத்து புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து தாலிசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1