.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஹஜ் பயணத்தின்போது அரசியல் கோஷங்களை எழுப்பினால், கடுமையான தண்டனை !

Unknown | 9:22 PM | 0 comments

மெக்கா, அக். 10-

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா புனிதத் தலங்களைத் தரிசித்து தங்கள் பிரார்த்தனைகளை இஸ்லாமியர்கள் நிறைவேற்றும் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை கடந்த ஞாயிறன்று தொடங்கி வரும் 18 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. கடந்த வருடம் 1.75 மில்லியன் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 3.2 மில்லியன் மக்கள் தங்களுடைய புனிதப் பயணத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த ஆண்டு மெக்காவின் பிரார்த்தனைப் பகுதியை விரிவுபடுத்தும் கட்டிடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சவுதி அரசு வெளிநாட்டு யாத்ரீகர்களில் 20 சதவிகிதத்தினரையும், உள்நாட்டு யாத்ரீகர்களில் 50 சதவிகிதத்தினரையும் குறைத்துள்ளது. நாளையுடன் இங்கு வரும் பயணிகள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு முஸ்லிம் நாட்டின் பத்து லட்சம் மக்களிலும் 1000 பேர் மட்டுமே வரவேண்டும் என்ற ஒதுக்கீடு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் திட்டங்கள் முழுவதும் பூர்த்தி செய்யப்படும்வரை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு திட்டம் பின்பற்றப்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, சென்ற வருடம் இதே சமயத்தில் ஏற்பட்ட மெர்ஸ் வைரஸ் நோய்த்தாக்கத்தினால் உலகம் முழுவதும் 58 பேர் இறந்து போனார்கள். அதில் 49 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வருடமும் அதுகுறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதால் யாத்ரீகர்கள் அனைவரும் வாயையும், மூக்கையும் மறைக்கும் துணித்திரையை (மாஸ்க்) உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற சிறிய அளவிலான ஹஜ் யாத்திரைகளிலும், உம்ரா திருவிழா நேரத்திலும் இந்த நோய்த்தாக்கம் ஏற்படவில்லை. ஆயினும் பாதுகாப்பு கருதி சவுதி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிரியா, எகிப்து போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையில் இந்த புனிதப் பயணம் நடைபெறுகிறது. எனவே, யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின்போது அரசியல் கோஷங்களை எழுப்பக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அவ்வாறு நடைபெறுமேயானால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சவுதி அரசு எச்சரித்துள்ளது. இந்த வருடம் 2 லட்சம் யாத்திரீகர்கள் வரக்கூடும் என்று அரசு எதிர்பார்க்கின்றது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1