.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

V.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு திருமணம் !!

Unknown | 10:30 PM | 0 comments

இது..
நம்ம ஊரு...
தலைவரு வீட்டு,
கல்யாணமுங்கோ..!

காலை முதலே களத்தூரு ஒரே பரப்பரப்பாயிட்டிருந்தது
ஏதோ திரு விழா போல..!
எல்லா சமுதாய மக்களும், கூட்டம் கூட்டமா கடைத்தெருவிலும்
பேருந்து நிருத்தத்திலும், தொறப்பாட்டிலும், அவங்கவங்க தெரு முக்கிலுமா
பயணம் புறப்பட தயாராயிருந்தாங்க!

என்னடான்னு பார்த்தா...
அட... நம்ம தலைவரு ‘இஸ்மாயில்—நூருல்ஹுதா’ வீட்டு கல்யாணம். நம்ம ஊரு
திரு(மண)விழாவாச்சே!

நம்ம ( எரையூர்) சின்னாத்துல புதுசா கட்டியிருக்கிற DKK திருமண மண்டபத்தில,
நம்ம தலைவரோட மூணு பசங்களுக்கும்தான் கல்யாணம். சொல்லவா வேணும்? நம்ம தலைவரு வீட்டு அழைப்பிதழ் எல்லார்வீட்டு கதவையும் தட்டிடுச்சுல்ல.. விடுபட்ட ஒண்ணு ரெண்டு வீட்டு கதவையும், மூணு பொண்ணு வீட்டு அழைப்பிதழும் விட்டு வைக்கல.

அதுமட்டுமில்ல.. என்னத்தான் நம்ம “சகோதர சமுதாய”த்தோட சில மக்களிடம், நம்ம மக்களுக்குன்னு சின்ன சின்ன கருத்து வேறுபாடிருந்தாலும், நம்ம தலைவர் அப்படியில்லேல்ல! நம்ம தலைவரோட “பிறசமுதாய நட்பு” நாம அறிந்ததுதானே? (எல்லாரோடவும் இன்முகத்தோட இனிமையா பழகுறவர்தானேன்னு சொன்னேன்.) அப்படி இது ஒரு புறமிருக்க... நம்ம தலைவருடைய அரசியல் செல்வாக்கு, அங்கே குழுமிய அரசியல் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அவர்களின் நல்லக்கைகள், அல்லக்கைகள் என அலைமோதிய கூட்டம் யப்ப யப்பா.

அதுவும் நம்ம ராசா வற்றாருன்னா சும்மாவா? அதானுங்க ஆ.இராசா.
இன்னும் புரியலயா? ஏதோ ‘ஒண்ணு புள்ளி எழுபத்தாறாயிரம் கோடி’ன்னு கொற சொல்லி போன தேர்தல்ல இப்ப ஆளுற கட்சிக்காரங்க ஓட்டு கேட்டாங்களே. அந்த ஆ.இராசாதானுங்க. நம்ம ஊருக்காரருங்கறதாலே, நம்ம தொகுதி மக்களுக்கு மத்தியில இன்னும் மவுசு கொறயல! அவரு எப்பவுமே “ராசாதானுங்கோ!”

மண்டபமே நெறங்சு வழியுது ‘டைனிங் ஹால்’ல மட்டுமில்லாம மண்டபத்த சுத்தி வெளியில எல்லா இடத்துலயும் பந்தல் போட்டு, பந்தி வச்சாலும் அப்பவும் இடம் போதாக்குறைதான். சைவப்பிரியர்களுக்கு ஒருபக்கமும், அசைவ ஆசாமிகளுக்குன்னு ஒரு பக்கமும் தடபுடல் விருந்துதான் போங்க!

இதெல்லாம் முடிங்சு ராசா வருவாரு, ராசா வருவாருன்னு, ஆ..ன்னு காத்துக்கிட்டிருந்தா... காத்துமாதிரி ஆ.ராசா ரெண்டற மணிக்குதான் வந்தாருங்க! என்ன...? அவர படம் புடிக்கலியான்னு கேககறீங்களா? அவரு வரும் போது கேமரா பேட்டரில சார்ச்சு இல்லிங்க!

ஆனால்.. ரொம்ப வருசத்துக்கப்புறம் எல்லா சமுதாயத்தினரும் கூடி
ஒரு உன்னத விழா கொண்டாடின மகிழ்ச்சி மனசு முழுக்க அப்பிக்கிடப்பது என்னமோ நெசம்தானுங்க!

திருவிழாப்போன்ற, சிறப்புமிக்க ஒரு திருமண விழா நடத்தின தலைவரையும்,மணமக்களையும் மீண்டுமொருமுறை மனசார வாழ்த்தறேனுங்க!


நன்றி :வசந்தவாசல் அ.சலீம்பாஷா.மற்றும் VKALATHURDMK.TK .













Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1