.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அமீரகத்திலிருந்து(U.A.E) இந்தியாவுக்கு ரூபாய் கொண்டு செல்ல தடை!

Unknown | 5:00 PM | 0 comments

.

துபாய்:இந்தியாவுக்கு ரூபாய்களை எடுத்து செல்ல, ஐக்கிய அரபு எமிரேட், தடை விதித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா செல்லும் போது, கணிசமான பணத்தை கையில் எடுத்து செல்கின்றனர். இதனால், விமான நிலைய சோதனையின் போது பிரச்னை எழுகிறது.விமானத்தில் பயணிப்பவர்கள், 7,500 ரூபாய் வரை பணத்தை கையில் எடுத்து செல்ல, இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த தொகை, 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து, இந்தியா செல்பவர்கள், இனி ரூபாயை எடுத்து செல்ல வேண்டாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, வங்கிகளுக்கும், நாணயமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய்க்கு பதிலாக, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 5,000 திர்காம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு செல்பவர்கள், ரூபாயை எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இது தொடர்பாக, இந்திய தூதரகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1