பெரம்பலூர் அருகே ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் சிறு மலைக் குன்றுகள் உள்ளன. இவற்றில் கல்குவாரி அமைத்து தினமும் வெடிவைத்து பாறைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. பெரிய மரங்களே இல்லாத இந்த மலைக்குன்றின் மேல் பகுதியில் மட்டும் அடர்ந்த புதர்களும், பாறைகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கவுல்பாளையம் கிராமத்தில் சில நாட்களில் செங்கோடன், கந்தன், ரங்கசாமி, முருகன், முரளி உள்ளிட்டோரின் சுமார் 20 ஆடுகள் மர்மமான முறையில் காணாமல் போயின. இந்நிலையில் மலை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிலர், மலை மேல் ஆட்டு எலும்புகள், மயில் இறக்கைகள் கிடப்பதாக தெரிவித்தனர்.
அருகில் உள்ள வயல்கள், பாறைகளின் அருகே மர்ம விலங்கின் காலடி தடத்தை பார்த்த கிராமத்தினர் ஊராட்சி தலைவர் செல்வகுமார் மற்றும் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் வடிவேல் உத்தரவுபடி வனத்துறையினர் மலை மேல் சென்று மர்ம விலங்கின் காலடி தடம், கழிவுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். காலடி தடத்தை வைத்து, அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. பிறகு டிஆர்ஓ சுப்ரமணியன் உத்தரவுப்படி, பொள்ளாச்சியில் உள்ள வன உயிரியல் காப்பகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 8 அடி நீளம், 3.5 அடி அகலம், 4 அடி உயரமுள்ள இரும்பு கூண்டு கொண்டு வரப்பட்டு, நேற்று கவுல்பாளையம் மலை மீது வைக்கப்பட்டது. அந்த கூண்டுக்குள் சிறிய ஆட்டுக் குட்டி இரையாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது கூண்டுக்குள் சிறுத்தை சிக்கி இருந்தது. அந்த சிறுத்தை 3 அடி நீளம், இரண்டரை அடி உயரம் உள்ளது. சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் என்று தெரிகிறது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் சென்று சிறுத்தையை பார்வையிட்டார். சிறுத்தையை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயத்தில் இறந்த ஆட்டுக் குட்டி சிறுத்தையை பிடிக்க கூண்டுக்குள் ஆட்டுக் குட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுத்தை ஆட்டுக் குட்டியை கடித்து கொன்று விடாமல் இருக்க, கூண்டின் மற்றொரு சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்தது. இன்று காலை பார்த்த போது கூண்டில் சிறுத்தை சிக்கி இருந்தது. ஆனால், ஆட்டுக்குட்டியும் இறந்து கிடந்தது. சிறுத்தை உறுமிய பயத்தில் ஆட்டுக் குட்டி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அந்த ஆட்டுக் குட்டியையே சிறுத்தைக்கு உணவாக கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பிக்க முயற்சி செய்யும் போது, கூண்டின் கம்பிகளில் மோதி, தலையில் ரத்தம் கட்டியுள்ளது. மேலும் ஒரு சிறுத்தையா? இந்த பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஒருவேளை சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டால், இதே கூண்டை வைத்து அந்த சிறுத்தையையும் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Category: மாவட்ட செய்தி

0 comments