S.S.L.C( பத்தாம் வகுப்பு) தனி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, செப்.6:
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு இம்மாத இறுதியில் தனித்தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்க தேர்வுத் துறை இணைய தளத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணத்தை 12ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் விருப்பப்பட்ட பாடங்களில் தற்போது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்று எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். செய்முறைத் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அறிவியல் பாட எழுத்து தேர்வு எழுதலாம்.
Category: மாணவர் பகுதி
0 comments