.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஊசி போட்டு வளர்த்த ப்ராய்லர் கோழியை ஏன் சாப்பிட வேண்டும்? சிந்தியுங்கள்.!!

Unknown | 11:38 PM | 0 comments

பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…

இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. 

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. 

அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.

ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு.

ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.

பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1