பெரம்பலூர் மாவட்டத்திற்கு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் வருகை!
பெரம்பலூர், செப்.25- பெரம்பலூர் மாவட்டத் திற்கு தமிழ் நாடு சட்டப் பேரவைமனுக்கள் குழுவினர் விரைவில் வருகைதர உள்ளனர், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் பெரம்ப லூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட எல்லைக் குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப் படவேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து மக்களை எழுதி (5 நகல்கள் தமிழில்) மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. சென்னை-9 என்ற முகவரிக்கு அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அனுப்பலாம். பொதுப்பிரச்சினை மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக இருக்கலாம். அப்படி வழங்கப்படும் மனுக் கள் ஒரேஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். வழங்கப்படும் மனுக்கள் தனிநபர் குறைகளை தெரி விப்பதாகவோ, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள பிரச்சினை களையோ, வேலைவாய்ப்பு வேண்டுதல் மற்றும் பட்டா வேண்டுதல் உள்ளிட்ட கார ணங்களுக்காகவோ, முதியோர் ஓய்வூதியம் வேண் டியோ, வங்கி கடன் வேண் டியோ அல்லது தொழில் கடன் வேண்டியோ, அரசுப் பணியில் மாறுதல் வேண் டியோ, அரசு அலு வலர்களின் குறைகளை தெரிவிப்பதா கவோ இருத்தல் கூடாது. ஆய்வுக்கு எடுக்கப்படும் வழங்கப்படும் மனுக்களில் சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்கள், தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை மனுக் கள் குழு பெரம்பலூர் மாவட் டத்திற்கு வருகை தரும்போது ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படும். அப்போது குழு கூட் டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். |
Category: மாவட்ட செய்தி


0 comments