287 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4¼ கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணை பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்!
பெரம்பலூர், செப்.25-
பெரம்பலூர் மாவட் டத்தை சேர்ந்த 287 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4¼ கோடி மதிப்பி லான கல்வி கடன் பெறு வதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங் கினார்.
கடன் வழங்கும் முகாம்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாணவ- மாணவி களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நடை பெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கலந்து கொண்டு 287 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 27 லட்சத்து 89 ஆயிரம் மதி¢ப்பிலான கல்வி கடன் பெறுவதற்கான ஆணை களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் உயர் கல்வி பொருளாதார காரணங் களால் எந்த வகையிலும் தடைபட்டு விடக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களையும், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டங்களையும், சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
சிறப்பு முகாம்கள்:
அந்த வகையில் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ மாணவிகள் உயர் கல்வி கற்கும் வகையில் கல்வி கடன் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத் திலேயே மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு தகுதியுடைய மாணவ, மாணவிகளுக்கு உடனுக்குடன் கல்வி கடன் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப் பட்ட மாணவ மாணவிகள் வசிக்கும் பகுதி களுக்குட்பட்ட வங்கி களின் கிளைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.
முறையாக செலுத்த வேண்டும்
பொருளாதார காரணங் களால் எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் மாணவ மாணவிகளின் உயர் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் கல்வி கடன்கள் வழங்கப் படுகிறது. இந்த கல்வி கடன் பெறும் மாணவ மாணவி களாகிய நீங்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கதக்க வகையில் உருவாக வேண்டும். மேலும் வேலைக் குச் சென்ற பிறகு உங்கள் உயர்கல்விக்கு உரிய நேரத்தில் உதவி செய்த வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முறையாக கல்விக்¢கடன் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வங்கி அதி காரிகள் ராஜேந் திரன், ராஜா, ஆதிமூலம். மாவட்ட சந்திர சேகரன் உள் ளிட்ட அலு வலர்கள், மாணவ, மாணவி கள், அவர் களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments