.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகள் முதல் குழு புறப்பட்டுச் சென்றது!

Unknown | 9:32 PM | 0 comments

புது டெல்லி: இவ்வாண்டு ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற  இந்திய முஸ்லிம்களின் முதல் குழுவும் இரண்டாம் குழுவும் நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளன.
443 பயணிகளைக் கொண்ட முதல்குழு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் மதீனா நகருக்கு நேற்று காலை புறப்பட்டுச் சென்றது.  இக்குழுவின் வழியனுப்புக் கூட்டத்தில்  டெல்லி முதல்வர் ஷீலா தீக்க்ஷித், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான், இந்தியாவுக்கான சவூதி அரேபியத் தூதர் முஹம்மது அல் சாத்தி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துகளை வழங்கினார்கள்.
இரண்டாவது குழு 447 ஹஜ் பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. இந்தியாவிலிருந்து 1,70,025 ஹஜ்ஜுப் பயணிகள் வரலாம் என்று சவூதி அரசு இந்திய அரசின் கோரிக்கைக்கு இணங்கியிருந்தாலும், தற்போது கட்டுமானப் பணிகள் மக்கா ஆலயத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதால்,  அந்த எண்ணிக்கையை 1,36,025 ஆகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானப் பணிகளின் காரணமாக, உள்நாட்டிலிருந்து ஹஜ்ஜுக்கு வருவோர் எண்ணிக்கையை 50 விழுக்காடு குறைத்திடவும், இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வருவோர் தொகையை 20 விழுக்காடு குறைத்தும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1