.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல்!

Unknown | 8:59 PM | 0 comments



சென்னை, செப்.21- வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 944 பிரவுசிங் சென்டர்களுடன் தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்க்கவே, முகவரியை மாற்றம் செய்யவோ பிரவுசிங் சென்டர்களில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். 

மேலும், ஏற்காடு இடைத் தேர்தலை வரும் அக்.16-ந் தேதிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.



கட்டணம் நிர்ணயம்:


இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச் சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார் பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள மையங்களில் எழுதி வைக்கப்படும்.

 இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1