.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் சிக்காத சிறுத்தைகள்: 10 நாளாக போராடும் வனத்துறை!

Unknown | 8:58 PM | 0 comments

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக 25க்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போனது. மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளும் திடீர் திடீரென மாயமாகவே கிராமமக்கள் பீதியிலும் பயத்திலும் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பு கவுல்பாளையம் கிராமத்திற்கு தெற்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் ஆடுகளின் எலும்புகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டது. பிறகு மர்ம விலங்கு ஏதோ அந்த பகுதியில் உலாவருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வனத்துறையினர் நடந்திய சோதனையில் விலங்குகளின் கால் தடம், கழிவு மற்றும் ஆடுகளின் எலும்புகள் இருப்பதை அறிந்து புலி அல்லது சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, பொதுமக்கள் யாரும் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மலைப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 8 ஆம் தேதி பொள்ளாச்சியிலிருந்து பொறிக்கூண்டு வரவழைக்கப்பட்டு, மலைப்பகுதியில் வைத்தனர். அந்தகூண்டில் 4 வயது ஆண் சிறுத்தை சிக்கியது. பின்னர் அந்த சிறுத்தை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால், கொஞ்சம் நிம்மதியில் அன்றிரவு கண்ணுறங்கிய மக்களுக்கு அடுத்த நாள் அதிர்ச்சி காத்திருந்தது, கவுல்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் சிறுத்தைகள் காலடி தடங்கள் காணப்பட்டது. 14 ஆம் தேதி மீண்டும் கவுல்பாளையம் மலையில் கூண்டு வைத்தனர். ஆனால் 5 நாட்களாகியும் சிறுத்தை சிக்கவில்லை.
இதற்கிடையில் பெரம்பலூர் மாவட்டம் வடக்குமாதவி, குறிஞ்சிநகர் பகுதியில் அதிகாலையில் பெண் சிறுத்தை இரண்டு குட்டிகளுடன் நடமாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தைகள் கவுல்பாளையம் மலையைவிட்டு இடம் பெயர்ந்திருக்கலாமென சந்தேகப்பட்ட வனஅதிகாரிகள், மலைமேல் வைக்கப்பட்டிருந்த கூண்டை வடக்கு மாதவி சாலையில் ரோஜாநகர் அருகில் வைத்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக வனத்துறை, தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து சிறுத்தைகளை பிடிக்க போராடி வருகிறார்கள். சிறுத்தைகள் நடமாட்டத்தால் மரணபயத்தில் உரைந்து கிடக்கிறது பெரம்பலூர் சுற்றுவட்டார கிராமங்கள். 

சிறுத்தைகள் சிக்குமா?

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1