எறையூர்-ஜவுளி பூங்கா அமையும் இடத்தை மாற்றக் கோரி நரிக்குறவர்கள் உண்ணாவிரதம்!
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமையவுள்ள ஜவுளி பூங்காவை, வேறிடத்துக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தோர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் எனக் கூறி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நரிக்குறவர் நலச்சங்க செயலர் எம். பாபு தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஏ. கணேசன், கிருஸ்ணகிரி மாவட்டத் தலைவர் கே. ஜெல்கேஷன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் எம். பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பு நிறுவனர் ஆர். சுப்ரமணியன் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து பேசினார்.
இதில் நரிக்குறவர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஏ.கே. பாபு, ஆர். விஜயசுந்தரம், சுந்தராஜ், தேவதாஸ், ச. ஜெயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments