.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

புதிய மொபைல் வாங்கப்போகும் முன் ......

Unknown | 8:55 PM | 0 comments


புதிய மொபைல் வாங்கப்போகும்முன் தெரிந்து கொள்ள‍ வேண்டிய சில அடிப்படை தகவல்கள்


முதலில் நீங்கள் எந்த போனை வாங்கப் போகிறீர்கள் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது இணையத்தில் நன்றாகத் தேடிப்பார்த்து உங்களுக்கேற்ற செல்போன் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு,
பிறகு கடைக்குச் சென்று வாங்கலாம்.

மொபைல் வாங்க முடிவெடுத்ததும் ஆன் லைனில் வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து செல்போனை பெற முயற்சிக்காதீர்க ள்(Avoid Online shopping). இது சில வேளைகளில் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். நேரடியாக நீங்களே செல்போன் கடைக்குச்சென்று வாங்குவதுதான் சிறந்த வழி.


நீங்கள் உங்களுடைய பழைய போனை மாற்றி, புதிய போனை வாங்கு வதென முடிவெடுத்துவிட்டால், அங்குள்ள எங்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer)பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களு டைய போனுக்கு அவர்கள் கொடுக்கும் விலை சரிதானா என நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். சில கடைகளில் மிக குறைந்த விலையே பழைய போனுக்கு (Old cell phone) தருவார்கள்.

நீங்கள் வாங்கபோகும் செல்போன் சீல்டு பாக்ஸ் தானா என்பதை பார்த்துவிட்டு வாங்குவதே சிறந்தது.

செல்போன் வாங்கியவுனேயே சிம்கார்டை போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display) என பல வசதிகளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பேசுவதற்கும், கேட்பதற்கும் செல்போன் முக்கிய மாக உங்களுக்குத் தேவை என்பதை நினைவில் வையுங்கள். எதிர் முனையிலிருந்து பேசுவது தெளிவாக, சப்தமாக கேட்கமுடிகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.


செல்போனை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு:

செல்போன் அடிக்கடி பயன்படுத்துபவர்களெனில் மற்ற வசதிகளைவிட ஒலி வாங்கி (mike), ஸ்பீக்கர் (speaker) போன்றவைகள் சிறந்த்தாக உள்ள அம்பாசிடர் மாடல் (ambassador model phones) போன்களை வாங்குவது சிறந் தது. காரணம் அதிக சென்சிடிவ் டைப் போன்கள் அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும்போது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம். அம்பாசிடர் வகை போன்கள் அதிகநாள் உழைக்க கூடியது.

காஸ்ட்லி போனா? கவனம் தேவை:

நீங்கள் வாங்கும் மொபைல் காஸ்ட்லி ஐட்டமாக (costly phone items) இருப்பின் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஒன்றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு வாங் குங்கள். வாங்கிய காஸ்ட்லிபோ னுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக Mobile Insurance செய்ய வேண்டாம் ஏனெனில் இது பெரும்பாலும் ஏமாற்று வேலை.

சீனா மொபைல்கள் தவிருங்கள்:

கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன் மாடல்களைத் (china phone models) தவிர்த்து விடுங்கள். அதிக கவர்ச்சி உள்ள அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். அதில் உள்ள ஆன்டெனா வழியாக ரேடியேஷன்கள் (high Radiation) அதிகமாக உள்வாங்கப்படும். இந்த அதிகளவு ரேடியேசன்களால் உடலுக்கு கேடு உருவாகும். விலைகொடுத்து நோயை வாங்க வேண்டாமே..!

பேட்டரி லைப்:

மொபைல் போனுக்கு பேட்டரி லைப் (battery backup) ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக் கும் போன்களையே கேட்டு வாங்கு ங்கள். அடிக்கடி பேட்டரி தீருவதால் தேவையில்லாத “டென்சன்” உருவாகும். முக்கியமான நேரங்களில் “பேட்டரிலோ” காட்டி உங்களை எரிச்சலைடய வைக்கும்.

மற்ற வசதிகள்:

மற்ற வசதிகளைப் பற்றி மொபைல் கடையிலேயே விலாவரியாக சொல்வார்கள். செல்போனுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகளைத் தவிர, மற்ற கவர்ச்சிகரமான விஷயங்களை முன்னிறுத்தி கடைக்காரர்கள் சொல்வார்கள். அது வியாபார யுக்தி. பணம் கொ டுத்து வாங்கும் நாம்தான் எச்சரிக்கையுடன் இருந்து நமக்குப் பிடித்தமான, பொருத்தமான போனை வாங்க வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1