.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி! ! ! !

Unknown | 10:00 PM | 0 comments




கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் தாது கொள்ளை மூலம் அரசுக்கு
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கடற்கரை மணலில் கார்னெட், இலுமினேட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனோ சைட் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த மணலை அள்ளவும், தாதுக்களை பிரிக்கவும் மத்திய அரசு சார்பில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த நிறுவனம் தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தாது மணலை அள்ளியதாக பிரச்னை எழுந்து, அது தொடர்பாக கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மோனோசைட் தாதுக்களை அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வகையில் நாட்டுக்கு
60
லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோரியம் அணுக்களை பிளக்க பயன்படுத்தப்படுகிறது. இது மோனோசைட்டை பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி பிரிக்கப்படுகிறது. இந்த தோரியம் கலந்த மோனோசைட் தாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கடலோர மாவட்ட தாது மணலில் அதிகம் கலந்துள்ளது. இப்பகுதியில் தாதுமணலை அள்ள அணுசக்தி கழக ஒப்பதல் பெற வேண்டும். இந்த மணலை அள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்னெட், இலுமினேட், ரூட்டைல் போன்ற தாதுக்கள் கலந்த மணலை அள்ள அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்கள், மோனோசைட் கலந்த மணலை அள்ளி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. அவர்களிடம் மோனோசைட் ஏற்றுமதிக்கு அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வகையில் மொத்தம் 21 லட்சம் டன் மோனோசைட் தாது கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது 1,95,300 டன் தோரியத்துக்கு சமம். இதன் மதிப்பு
60
லட்சம் கோடி. இந்த பணம் முழுமையும், அரசுக்கு வராமல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளன. டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
அதிர்ச்சி தகவல் அம்பலம்
இது குறித்து மத்திய அமைச்சர் அகமது சென்னையில் நேற்று கூறுகையில், “கடற்கரை மணலில் தோரியத்தை பிரித்து வெளிநாடுகளுக்கு கடத்தியதில்
60
லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்தி வெளியானது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக நிபுணர் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கைக்கு பின்பே உறுதி செய்யப்படும். தவறு நடந்திருப்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
மோனோசைட் என்றால் என்ன?
செம்மண் நிறத்தில் பாஸ்பேட் கலந்த அரிய வகை தாது மோனோசைட். இதில் மோனோசைட்& சிஇ, மோனோசைட்& எல்.ஏ, மோனோசைட்& என்.டி, மோனோசைட் & எஸ்.எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறாக மோனோசைட் விளங்குகிறது. தோரியம் கதிர்வீச்சு அபாயம் உள்ளது . இந்தியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவில் மோனோசைட் கிடைக்கிறது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் & 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.
இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி! ! ! !  இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.  இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற இருப்பதை அறியும் முடியும் என்றும் கூறப்படுகிறது. தோரியம் கடத்தலில் மத்திய மண்டல தாது பொருட்கள் கட்டுப்பாடு அதிகாரியாக உள்ள ரஞ்சன் சகாய் என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.  தோரியம் கடத்தல் குறித்தும் ரஞ்சன் சகாய் முறைகேடு குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தோரியம் கடத்தலால் நாட்டிற்கு மிகப்பெரிய பெருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கதிர்வீச்சு தன்மையுள்ள இந்த பொருட்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால் பெரும் நாச வேலைகளுக்கு காரணமாகிவிடும் என்ற நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கவலை அளிப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால், தோரியம் கடத்தப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.சென்னை விமான நிலையத்தி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, கடல் பகுதியில் தோரியம் கடத்தல் உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  News - ஆந்தை ரிப்போர்ட்டர்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1