துபையில் புஷ்ரா நல அறக்கட்டளை நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி .
அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ்).
துபாய் .ஆகஸ்ட் 3.
துபாய் -தேராவில் உள்ள அல் காமிஸ் முஹம்மது உணவகத்தின் மாடியில் நேற்று (02-08-2013) புஷ்ரா நல அறக்கட்டளையின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .
நிகழ்ச்சிக்கு தலைவா் K..அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தார் . நிகழ்ச்சி தொடக்ககமாக ஹஜ்ரத் .சிக்காந்த் காசிம் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள் . பின் அப்துல் ஹக்கீம் நமது ஊரில் ஜகாத் பவுண்டேசனுக்கு உங்கள் ஜகாத் தொகை கொடுத்து ஊரில் ஏழை இல்லாத சூழ்நிலை உருவாக்க வேண்டும் எனவும் .ஜகாத் பவுண்டேசனில் கடந்த இரண்டு ஆண்டுகள் நமது ஊரில் செய்த பணிகள் குறித்து பேசினார்.
பின் புஷ்ரா நல அறக்கட்டளை நமது ஊரில் ஏழைகளுக்கு வட்டி இல்லா கடன் திட்டம் சிறப்பாக செயல் படுவதாகவும் ,மேலும் இதற்கு பணம் அதிகம் தேவை படுவதாகவும் கூறினார்.ஆகவே இந்த திட்டத்தில் நமது ஊர் பொது மக்கள் குறைந்த பட்சம் ஐந்து ஆயிரம் முதல் உங்களால் முடிந்த அளவு வைப்பு தொகையாக செலுத்தும் படி கேட்டுக் கொண்டார்.உங்கள் பணம் எப்போது தேவையோ ஒரு மாதம் முன்னதாக நீங்கள் தெரிய படுத்தினால் உங்கள் பணம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் எனவும் ,உங்கள் பணத்திற்கு புஷ்ரா நல அறக்கட்டளை முழு பொறுப்பு என கூறினார் .
பின் அபுதாபியில் இருந்து வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் ஹஜ்ரத் சாதிக் ஃபைஜி அவர்கள் ரமலான் மாதம் ஜகாத்தின் சிறப்பை பற்றியும்,வட்டியின் தீமை பற்றியும் பேசினார்கள் .
இந்த நிகழ்ச்சிக்கு புஷ்ரா நல அறக்கட்டளை உறுப்பினர்கள் ,மற்றும் V.களத்தூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்கள்.நிகழ்ச்சி முடிவில் துனைத்தலைவா் M.அப்துல்லா பாஷா அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவருக்கும் புஷ்ரா நல அறக்கட்டளை சார்பாக நன்றி தெரிவித்து கொண்டார் .
Category: துபாய்
0 comments