சர்ச்சைக்குரிய கருத்து நரேந்திரமோடி மீது அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு பதிவு!
குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா
கலவர சம்பவம்குறித்து வருத்தம் உண்டா? என்ற
கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட்டு பதில்
அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி
மீது பாட்னா பல்கலைக்கழகபுள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசியல்மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி,
நரேந்திரமோடி மீது வழக்கு பதிவுசெய்ய
உத்தரவிட்டார்.முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு
கோர்ட்டுக்குமாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31–ந் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங்விசாரிக்கிறார்.
Category: மாநில செய்தி
0 comments