.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

Unknown | 9:39 PM | 0 comments

.
 தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்–1, பிளஸ்–2, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, ஐ.டி.சி., பாலிடெக்னிக், பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில்., ஆராய்ச்சிப்படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம்

பிளஸ்–1 வகுப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு படிப்பவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 

www.momascholarship.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை என்ற தலைப்பை தேர்வு செய்து அதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானச்சான்று, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி ஆகிய ஆவணங்களை இணைத்து கையொப்பமிட்டு கல்வி நிலையங்களில் புதிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 30–ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 10–ந் தேதிக்குள்ளும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கி கணக்கு எண் அவசியம்


சிறுபான்மையின மாணவ, மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து புதிய விண்ணப்பங்களை அக்டோபர் 10–ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 20–ந் தேதிக்குள்ளும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் வழங்கப்படுவதால் மாணவ, மாணவிகள் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கிளை குறியீடு எண்களை தவறாது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையுங்கள்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1