அரசின் சிறப்பு திட்டங்களால் மாணவர்களின் தேர்ச்சி வீதம் உயர்வு: பெரம்பலூர் கலெக்டர் "பெருமிதம.
பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது' என பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் ஒரு லட்த்து, 27 ஆயிரத்து, 830 மாணவ, மாணவிகளும், விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 84 ஆயிரத்து, 640 மாணவ, மாணவிகளும், விலையில்லா பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் 19 ஆயிரத்து, 64 மாணவ, மாணவிகளும், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ப்ளஸ் 1 பயின்ற 9,180 மாணவ, மாணவிகளும், விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ப்ளஸ் 2 பயின்ற 9,108 மாணவ, மாணவிகளும் பயனடைந்துள்ளனர். அதேபோல, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயின்ற 30 ஆயிரத்து, 924 மாணவ, மாணவிகளுக்கு ஐந்து கோடியே, 16 லட்சத்து, 93 ஆயிரம் ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பயின்ற 11 ஆயிரத்து, 397 மாணவ, மாணவிகளும், விலையில்லா கிரையாண் பென்சில் வழங்கும் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்ற 9,109 மாணவ, மாணவிகளும், விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கும் திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை பயின்ற 34 ஆயிரத்து,643 மாணவ, மாணவிகளும், விலையில்லா புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை பயின்ற 34 ஆயிரத்து,643 மாணவ, மாணவிகளும் பயனடைந்துள்ளனர். தமிழக அரசு கல்வித்துறைக்கும், மாணவ, மாணவிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் இந்தாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டைவிட 10.76 சதமும் (இந்தாண்டு தேர்ச்சி 81.59 சதம், கடந்த ஆண்டு தேர்ச்சி 70.83 சதம்), எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டைவிட 9.02 சதமும் உயர்ந்துள்ளது (இந்தாண்டு தேர்ச்சி 84.05 சதம். கடந்தாண்டு தேர்ச்சி 75.03 சதமாகும்).இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments