நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என்று பெரம்பலூரில் அதிகாரியிடம் ஒருவர் மனு கொடுத்தார்.
.
பெரம்பலூர் 19.
வடிவேலு பாணியில் புகார்
நடிகர் வடிவேலு கண்ணும் கண்ணும் சினிமா படத்தில் கிணற்றை காணவில்லை என்றுபோலீசாரிடம் கூறுவார். இந்த காமெடி காட்சியை நினைவு படுத்தும் வகையில் இங்கு ஒருவரும் கிணற்றை காணவில்லை என்று அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:–
பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன்சிவநேசன்(வயது35) இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில்டிரைவராகபணிபுரிந்துவருகிறார்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த சிவநேசன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுப்ரமணியத்தை சந்தித்து புகார் மனுகொடுத்தார்.
அந்த மனுவில் நலத் தொடக்கப்பள்ளி பின்புறம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தி வந்த பொது கிணறு ஒன்று இருந்தது. ஆனால்தற்போது அந்த கிணற்றை காணவில்லை. கிணறு இருந்த இடத்தை சிலர் குடிசை வீடு அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
நடவடிக்கை வேண்டும்
எனவே சம்மந்தப்பட்ட இடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் அல்லது சுகாதார வளாகம் அமைத்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பொதுஇடத்தை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது உரிய விசாரணை நடத்திட மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
Category: மாவட்ட செய்தி

0 comments