.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் .

Unknown | 9:07 PM | 0 comments

சவுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.  இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியர்கள் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சவுதி அரசாங்கம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.  முறையான ஆவணங்கள் இல்லாத வர்கள் வரும் ஜூலை 3ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அதிர்ச்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து இந்தியர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திடம் சென்று இந்தியாவுக்கு வர விசா கேட்டனர்.  கொடுக்காமல் இழுத்தடிக்கவே, முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.   தற்போது அங்கே கடும் வெயில். அதையும் பொருட்படுத்தாமல் ஒதுங்க கூட நிழல் இல்லாத அந்த தூதரகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி இக்கட்டான நிலையில் தவிக்கும் இந்தியர்களை  தனி விமானம் அல்லது தனிக்கப்பல் மூலம் இந்தியா அழைத்து வரவேண்டும் என கோரிக்கை விடுத்து ’இந்திய தேசிய லீக்’ கட்சியின் பொதுசெயலாளர் தடாரஹிம் தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

படங்கள் : அசோக்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1