.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நாளை முதல் "நியாயமான விலையில்" காய்கறிகளை விற்பனை செய்ய 31 கடைகள்- முதல்வர் ஜெ. திறக்கிறார்!

Unknown | 6:59 AM | 0 comments


சென்னையில் 31 இடங்களில் நியாய விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய கடைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க இருக்கிறார். பருவமழை பொய்த்து காய்கறிகள் விளைச்சல் குறைந்த போனதால் வரத்து இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலைகளுமே மிகக் கடுமையாக உயர்ந்தன. 

இதனால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வெளி சந்தைகளில் காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் தரமான காற்கறிகளை விற்கவும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 31 இடங்களில் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்திருந்தார். 

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த காய்கறி கடைகள் திறப்பு விழா நாளை பிற்பகல் நடைபெறுகிறது. தேனாம்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் காமதேனு சிறப்பங்காடியில் உள்ள பண்ணை-பசுமை காய்கறி கடையை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். 

சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டி.யு.சி.எஸ். சிறப்பங்காடியிலும், கீழ்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களிலும், சிந்தாமணி கூட்டுறவு சங்கம் மூலம் அண்ணா நகர், திருமங்கலத்திலும், இப்புதிய காய்கறி கடைகள் திறக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை மூலம் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும், பார்க்டவு்ன், ரெயின்போ கூட்டுறவு சங்கங்கள் மூலமும் இக்கடைகள் திறக்கப்படுகின்றன. இது தவிர 2 மொபைல் வாகனங்களிலும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1