வீட்டு உபயோக மின் கட்டணம் குறைப்பு; ஜெ. அதிரடி அறிவிப்பு
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா,சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டண விகித மாற்றம் குறித்த தனது ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30.3.2012 அன்று வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.7,874 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இருப்பினும், இந்தக் கட்டண உயர்வில் ரூ.1,118.44 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்க அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மானியத் தொகை ஆண்டொன்றிற்கு ரூ.3554.16 கோடி ஆகும்.
குடிசைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு ரூ.2.50 என்று கணக்கிடப்பட்டு, மாதம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.60 என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம், 14 லட்சம் நுகர்வோர் பயன் பெறுவர்.
விவசாயத்திற்கான மின் கட்டணத்தை குதிரைத் திறன் ஒன்றிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.250 லிருந்து ரூ.1750 ஆக மாற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே மின்சாரத்தை தொடர்ந்து பெற்று வருவார்கள்.
இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு ரூ.2.60 இல், ரூ.1.50 ஐ தமிழக அரசு மானியமாக அளிக்கும் என ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 மட்டுமே.

Category:

.jpg)
0 comments