.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஹஜ் மானியம்’ – மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

Unknown | 2:28 PM | 0 comments


பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு ‘ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை’ என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக…கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன. இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் ‘எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை’ என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக….இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ!

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1