பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 குழந்தைகளுக்கு சென்னையில் உட்செவி அறுவை சிகிச்சை.!
.................................................................................................................................................................................................
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டாரங்களிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள், தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் மேற் கொண்டு அறுவை சிகிச்
சைக்காக பலரையும் பரிந்துரைத்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வட்டாரங்களிலும் அரசுத் துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மூலமும் அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பிறவியிலேயே காது கோளாதவர்களுக்கு காக்கிளியர் இம்ப்ளாண்ட் (உட் செவி அறுவை சிகிச்சை) மூலமாக அறுவை சிகிச்சை செய்து, தொடர் பயிற்சியின் மூலமாக பேச்சு மற்றும் கேட்கும் திறனை மேம்படுத்த முடியும். இந்த அறுவை சிகிச்சை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செய்தால் மட்டுமே பயன் தரும்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 6 வயதிற்குட்பட்ட பிறவியிலேயே காது கேளாத குழந்தைகள் கண்டறியப்பட்டு இதுவரை 39 குழந்தைகளுக்கு தலா ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலான அறுவை சிகிச்சை சென்னையில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அங்கீகாரம்பெற்ற காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அம்மருத்து வமனை மருத்துவர்களாலேயே 1 ஆண்டு பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 2ம் கட்டமாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் அடிப்படையில் 6 வயதிற்குட்பட்ட மேலும் 16 குழந்தைகள் உட்செவி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இக்குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு தனி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த முறை உட்செவி அறுவை சிகிச்சை மேற்கொண்டு பயனடைந்த பெரம்பலூர் வட்டாரம், செங்குணத்தை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயின் பேச்சுத்திறன் குறித்த வீடியோ காட்சி மற்றும் குழந்தையின் பெற்றோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறித்து தெரிவித்த விளக்க வீடியோ காட்சி சென்னை செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு காட்சியிடப்பட்டது.
nanri : vasanth jeeva.
Category: மாவட்ட செய்தி
0 comments