.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் நகரில் ரூ.3¾ கோடியில் மருத்துவமனை விரிவுபடுத்தும் பணி- அம்மா உணவகம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு!

Unknown | 9:38 PM | 0 comments

பெரம்பலூர் நகரில் ரூ.3¾ கோடியில் மருத்துவமனை விரிவுபடுத்தும் பணி, அம்மா உணவகம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் தரேஸ் அஹமது ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நெடுஞ்சாலைத்துறை மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட திருநகர்-பழைய பஸ் நிலைய சாலைப்பணி, பொதுப்பணித்துறை மூலம் ரூ.3.70 கோடி செலவில் 100 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை விரிவுபடுத்தும் பணி, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் தரேஸ் அஹமது ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

மேலும் பெரம்பலூர்-துறையூர் சாலையிலிருந்து திருநகர் செல்லும் சாலையை விரிவுப்படுத்தி வளைவு அமைக்கும் பணி, பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி, ரூ.1.90 கோடி மதிப்பில் ரோவர் வளைவிலிருந்து எளம்பலூரை இணைக்கும் புறவழிச்சாலை பணி, ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை பணி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோகன், நகராட்சி ஆணையர் தாண்டவமூர்த்தி, கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணியன், உதவி பொறியாளர் அனிதா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மனோகரன், டாக்டர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1