.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அரசுக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம்!!

Unknown | 9:57 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2014- 2015-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (இரு பாலர்)  சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 27-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, மே 26-ம் தேதிக்குள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் கல்லூரியில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1