.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஷார்ஜாவில்(UAE)மீன் விற்கும் இன்ஜினியர்! வியப்பில் ஆழ்த்தும் சம்பவம்!!

Unknown | 8:45 PM | 0 comments



பாகிஸ்தானை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர், ஷார்ஜாவில் உள்ள மீன் சந்தையில் வேலை செய்வது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சைபுல்லா(வயது27), இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உள்ள மீன் சந்தை ஒன்றில் மீன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தானில் உள்ள ஜின்னா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில், தகவல் தொழில்நுட்பத் துறையில்(ஐ.டி.,) பொறியியல் பட்டம் பெற்றவர்.
இதுகுறித்து சைபுல்லா கூறுகையில், கடந்த 2000ம் ஆண்டு லண்டனில் முதுகலை பட்டப்படிப்பான வணிக மேலாண்மை பயில சென்றேன்.
ஆனால் இதற்கிடையில் என் தந்தையின் மரணம் நேர்ந்ததால் சகோதரர்களை காப்பாற்றவும், வீட்டை கவனித்து கொள்வதற்காகவும் நான் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே என் படிப்பை பாதியில் துறந்து வீடு திரும்பினேன். கடந்த 2009ம் ஆண்டு வேலை தேடி ஷார்ஜாவுக்கு வந்தேன்.
ஆனால் முன்னனுபவம் இல்லாத காரணத்தால் பல குழுமங்கள் எனக்கு வேலை அளிக்க மறுப்பு தெரிவித்தன.
எனினும் வாய்ப்புகளே அளிக்கமால் முன் அனுபவம் பற்றி கேட்பது கோபத்தை வரவழைத்தது.
எனவே வேலை இல்லா சூழலால் குடும்பத்தை வழிநடத்தும் நோக்கத்தில் இப்பணியில் ஈடுப்பட்டுள்ளேன், இதை ஒருபோதும் தரக்குறைவாக எண்ணுவதில்லை.
ஒரு நாளில் நானும் வாழ்வில் முன்னேறுவேன், அதனையே என் நண்பர்களும் என்னோடு பணிபுரிபவர்களும் கூறுகின்றனர் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் மீன் வாங்கும் வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி மீன் விற்பதில் இவர் வல்லமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1