.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊர்க்காவல் படைக்கு 57 வீரர்கள் தேர்வு 198 பேர் பங்கேற்பு!

Unknown | 8:31 PM | 0 comments



பெரம்பலூர், ஜன.9- 

பெரம்பலூர் மாவட் டத்தில் ஊர்க்காவல் படைக்கான வீரர்கள் நிய மனத்திற்கு 28 பெண்கள் உள்பட 198 பேர் கலந்து கொண்டனர்.

57 பணிஇடங்களுக்கு

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வீரர்கள் காலியாக உள்ள ஆண்கள்- 34 மற்றும் பெண்கள்-23 மொத்தம் 57 பணிஇடங்களுக்கு நியமனம் செய் வதற்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா முகாமை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்தசாரதி, ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஜெ.அரவிந்தன் முன் னிலையில் சப்இன்ஸ்பெக்டர் மதுமதி, ஊர்க்காவல் படை தளபதி தர்மராஜ், உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன் ஆகி யோர் சான்றிதழ்களை சரி பார்த்து, உடல் தகுதியை பரி சோதித்து தேர்வு செய்தனர்.

45 நாட்கள் கவாத்து பயிற்சி

இந்த முகாமில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களில் இருந்து 28 பெண்கள் உள்பட 198 பேர் கலந்து கொண்டனர். ஊர்க்காவல் படைக்கு தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளவர்கள் 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து பணிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஊர்க் காவல் படைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும். 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்படும் என்று மண்டல தளபதி அரவிந்தன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1