.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் கட்டணத்தை குறைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்!

Unknown | 8:23 PM | 1 comments



பெரம்பலூர், ஜன.25-

பெரம்பலூர் மாவட் டத்தில் ஆவின் பால் மற்றும் தனி யார் பால் விலை உயர்த்தப் பட்டுள்ளதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடந் தது. மாவட்ட வருவாய் அதிகாரி எம்.ஏ. சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்கு னர், கூட்டுறவு இணைப் பதி வாளர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) கனகசபை, மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் மாணிக்கம், மாவட்ட விவசா யிகள் சங்கத்தலைவர் செல்ல துரை, பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதி கள் என்ஜினீயர் கண்ண பிரான், பூலாம்பாடி வரத ராஜன், துங்கபுரம் ராம லிங்கம், முருகேசன், குரும் பலூர் பேரூ ராட்சி கவுன்சிலர் ரமேஷ், வி.களத்தூர் ஏ.கே.ராஜேந் திரன், நீலகண்டன், பூ.விசுவ நாதன் உள்பட விவ சாயிகள் பலர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். அவர்கள் பேசியதாவது:-

தூர் வார வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள லாடபுரம்- மேலப்புலியூர் அருகே பச்சை மலை தொடரில் உற்பத்தியா கும் ஊற்றுநீரால் பெரம்பலூர், குரும்பலூர் உள்ளிட்ட 15-க் கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பு கின்றன. பருவமழை பொய்த்து விட்ட நிலையிலும் நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரி சீரமைத்தால் மழை பெய்யும் போது நீர்வரத்து தடையின்றி இருக்கும்.

வேப்பந்தட்டை ஒன்றியத் தில் அரும்பாவூர் பெரியஏரியை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள னர். இந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றிட வேண்டும்.

நீர்த்தேக்க திட்டம்

மருதையாற்றில் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப் பட உள்ள நீர்¢த்தேக்க திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

விஸ்வக்குடி நீர்த்தேக்க திட் டத்துடன் அனைத்து விவசாயி களும் பலன் பெறும்வகையில் கோரை யாற்று நீர்வழிப் பாதையை இணைத்திட வேண்டும். மின்மோட்டார் இணைப்புக் காக முன்பதிவு செய்து காத்து கிடக்கும் கிணற்றுப்பாசன விவசாயிக ளுக்கு உடனே மின் இணைப்பு வழங்கிட வேண் டும்.

வெள்ளாற்றில் பாலம்

வேப்பந்தட்டை தாலுகா வெள்ளுவாடி-கடலூர் மாவட்டம் கொரக்காவாடி இடையே வெள்ளாற்றில் பாலம் கட்டவேண்டும். கீரை வியாபாரம் செய்யும் விவசாயத் தொழிலாளர் களுக்கு உணவு பாது காப்புத் துறையினர் உரிமம் பெற வேண்டும் என்று தொல்லை கொடுக்கின்றனர். அவர்க ளுக்கு தோட்டக் கலைத்துறை மூலம் அடை யாள அட்டை வழங்கிட வேண்டும்.

பெரம்பலூரில் இருந்து வேப்பூருக்கு சென்றுவரும் அரசு டவுன் பஸ்சை பள்ளி விடும் நேரத்தில் வந்து செல்லு மாறு செய்திட வேண்டும்.

பால் விலையை குறைக்க வேண்டும்

அரசு பால்கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த் தியதை தொடர்ந்து, பெரம் பலூர் மாவட்டத்தில் ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.26-க்கும், இதர தனியார் பால்கள் ரூ.28, ரூ.30-க்கு விற்பனை செய்யப் படுகிறது. பால்விலையை குறைத்திட அரசுக்கு பரிந் துரை செய்திடவேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்ட தால், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை கட்ட முடியவில்லை. ஆகவே விவ சாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திடவேண்டும். கரும்புவிவசாயிகள், சர்க்கரை ஆலை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கூட்டத்தை கூட்டவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கேள்வி களுக்கு கலெக்டர் பதில் அளித்துப்பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஏறத்தாழ 400 எக்டேரில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டில் 4ஆயிரம் எக்டேர் பரப்பில் காய்கறி சாகுபடிக்காக சிறப்பு நட வடிக்கை எடுக்கப் பட்டு வருகி றது. இதனால் விவசாயிகள் நல்ல லாபம் பெற வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித் தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

1 comment:

ads2

Catwidget2

Catwidget1