பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்!

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். தரேஸ் அஹமது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:
கொசு ஒழிப்பு
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் ஏடிஸ் எனப்படும் கொசு வகை தேங்கியுள்ள நீரில் உருவாகி பொதுமக்களை கடிப்பதே ஆகும் எனவே இவ்வகையான கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத் திற்கும் 20 களப்பணியாளர்களும், பேரூராட்சி மற்றும் நகரா ட்சிப் பகுதிகளில் ஒரு வார்டிற்கு ஒரு களப் பணியாளர் வீதம் நியமிக்கப் பட்டு கொசுப்புழு உற்பத்தி யாகும் இடங்களை கண்ட றிந்து அவற்றை முற்றிலும் அழிக்கும்¢ பணி களில் ஈடுபடவேண்டும். அந்தந்த பகுதிகளில் வீட்டைச் சுற்றி நீரை தேங்கவிடக்கூடாது. டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்பு ணர்வு தகவல்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண் டும்.
பிளிச்சிங் பவுடர்
மேலும், அனைத்து மேல் நிலை நீர் தேக்க தொட்டி களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு கழுவி சுத்தம் செய்யப்பட வேண் டும். குடிநீர்¢¢ குழாய் இணைப்பு களில் உடைப்பு இருந்தால் உடனடி யாக சரி செய்ய வேண்டும். கழிவு நீர்¢ கால் வாய்களின் அருகில் உள்ள குடிநீர்¢¢ குழாய் இணைப்புகளை மாற்றி அமைக்கப் பட வேண்டும்.
குளோரினேசன்
குடிநீர் குழாய் வீட்டு இணைப்புகள் குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதை முற்றிலும் அகற்றி விட்டு தரைக்கு மேல் உயர்த்தி அமைக்கப்பட வேண் டும். தினசரி குளோரினேசன் ( 1000 லிட்டருக்கு 4 கிராம்) வீதம் செய்த பிறகே குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். வீட்டின் அருகே நீர் தேங்க வாய்ப்பு இல்லாத வகையில் உடைந்த மண் பாண்டங்கள் உரல், ஆட்டுக் கல் , தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்கள் போன்றவற்றை அகற்றப்பட வேண்டும். வீடுகளில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை தேய்த்து கழுவிய பின்னர் நீர் நிரப்ப வேண்டும். உபயோகப் படுத்தும் அனை த்து தண்ணீர் பாத்திரங்களையும் கொசு புகுந்து முட்டையிடா வண்ணம் மூடி வைக்க வேண் டும்.
சுகாதார பணியாளர்கள்
சுகாதார பணியாளர்கள் கிராமங்களுக்கு வரும் போது அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் போது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். இதனை உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகளும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணி மிகவும் முக்கிய மான பணியாகும். தற்பொழுது மழைக்காலம் என்பதால் நீர் தேங்குவதற்கும், கொசுப்புழு உற்பத்தி யாவதற்கும் வாய்ப்பு கள் இருக்கிறது.
அனைத்து நடவடிக்கை
எனவே மேற்சொன்ன பணிகள்யாவும் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப் பட வேண்டும். 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப் புழுக்களை அழிப்ப தற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) குமார், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) இரவீந்திரன், இளநிலை பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர்கள், அனைத்து நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், சுகாதார ஆய்¢வாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Category: மாவட்ட செய்தி
0 comments