சோலார் பேனல் மானியம் விவகாரம் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றம்!
சென்னை, நவ.4:
வீடு கூரையில் சோலார் பேனல் பொருத்தும் திட்டத்திற்கு இனி புதியதாக அமைப்போருக்குதான் மானியம் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே சோலார் பேனல்களை அமைத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 100 விதியின் கீழ் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பை வெளியிட் டார். அதில், வீடு கூரைகளில் சோலார் கருவி பொருத்தும் திட்டத்திற்கு மானியம் அளிக்கப்படும். அதாவது 1 கிலோ வாட் அளவுக்கு பேனல்களை பொருத்தினால், மாநில அரசு சார்பில்
க்ஷீ20
ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கான அரசு வழிகாட்டு மதிப்பு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய அரசின் மரபுசக்தி எரிசக்தித்துறை அமைச்சகத்தின் மதிப்புப்படி, வீட்டின் கூரையில் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் களை பொருத்த
க்ஷீ1
லட்சம். அதில் ஏற்கனவே மத்திய அரசின் மானிய தொகை
க்ஷீ30
ஆயிரம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில்
க்ஷீ20
ஆயிரம் மானியம் அளிக்கப்பட உள்ளது. எனவே மின்நுகர்வோர்
க்ஷீ50
ஆயிரம் முதலீடு செய்தால் போதும். ஆண்டுதோறும் சுமார் 1,600 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால், ஆண்டுக்கு
க்ஷீ9,200
சேமிக்க முடியும். ஆண்டுதோறும் 10,000 பேருக்கு மானியம் அளிக்க ஆண்டுதோறும்
க்ஷீ20
கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது. மேலும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை பட்டியல் வெளியிடும் நிறுவனங்களில்தான் சோலார் பேனல்கள் வாங்க வேண்டும். இனிமேல் புதியதாக சோலார் பேனல்களை அமைப்போருக்குதான் மாநில அரசின் மானியம் கிடைக்கும்.
மானியம் பெற விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். தனிநபராகவும், குழுவாகவும் மானியம் பெற முடியும். அதன்படி கேட்கும் விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒப்புதல் கடிதம் இ&மெயில் அல்லது எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகள் மூலம் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு அனுபப்படும். சீனியாரிட்டி அடிப்படையில் மின்நுகர்வோர் மானியத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் 3 மெகா வாட் அளவுக்கு சுமார் 50 ஆயிரம் வீட்டு கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது, கால், அரை, ஒன்று கிலோ வாட் அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பாதிப்பேருக்கு ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த மானியமே கிடைக்காத நிலையில் இருக்கிறது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ளது மானியமும் பொருத்தாது என்று தெரிவிப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சோலார் மின்உற்பத்தி வல்லுநர் சரவண பெருமாளிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு கூரையில் சோலார் பேனல்களை அமைத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது அறிவித்துள்ள மாநில அரசின் மானியம் பொருந்தாது என்று தெரிவித்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்கனவே சோலார் பேனல்களை அமைத்தோருக்கும் மானியம் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Category: மாநில செய்தி
0 comments