காலரா, வாந்தி-பேதி வராமல் தடுக்க தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்!
சென்னை, நவ.11-
காலரா, வாந்தி-பேதி வராமல் தடுக்க தண்ணீரை காய்ச்சி குடியுங்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைகாலம் நடந்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதிலும் அல்லாமல் பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. மழையின் காரணமாக காலரா, வாந்தி-பேதி வராமல் தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகம் பல நகரங்களில் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் குழாய்கள் டேப் இல்லாமல் இருக்கக்கூடாது. உடனே டேப் மூடி போட ஏற்பாடு செய்யவேண்டும். இல்லை என்றால் குடிநீருடன் கிருமிகள் கலக்க வாய்ப்பு உள்ளது. குடிநீர் விநியோகிக்கும்போது குளோரின் கலந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. அது சில நேரங்களில் சரியான அளவு குளோரின் கலக்காமல் அதிகமாக கலப்பதால் குடிக்க மனம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதாரத்துறை ஆய்வாளர்களும் சரியாக குளோரின் கலக்கப்படுகிறதா என்று பார்க்கவேண்டும். குளோரின் கலந்தால் தான் வாந்தி-பேதி மற்றும் காலரா போன்ற நோய்கள் தண்ணீர் மூலம் வராமல் தடுக்கமுடியும்.
மேலும் ‘ஈ’ மொய்த்த பண்டங்களையும் பொதுமக்கள் கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள். வீடுகளில் தண்ணீரை காய்ச்சி குடியுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடியுங்கள். மேலும் பழைய பண்டங்கள், கெட்டுப்போன பண்டங்கள், ஆகியவற்றை சாப்பிடாதீர்கள். அவ்வாறு ஏதாவது வாந்தி-பேதி எடுத்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். அதற்கு உரிய அனைத்து மருந்துகளும், குளுக்கோஸ் உள்ளிட்டவைகளும் தயார்ஆக உள்ளன. போதுமான மருந்துகள் உள்ளன. குறிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் அருகில் விற்கப்படும் ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது.
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Category: மாநில செய்தி

0 comments