திருச்சியில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக மாபெரும் ஷரியத் மாநாடு நடைபெற்றது.!
திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமாசபை சார்பாக மாபெரும் ஷரியத் மாநாடு நேற்று 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை திருச்சி சிங்காரதோப்பு கோல்டன் மஹாலில் நடைபெற்றது.காலை முதல் நடைபெற்ற மாநாட்டின் மூன்றாம் அமர்வாக ஷரியத் அரங்கம் மாலை 6.50 மணியளவில் ஜமாத்துல் உலமா மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் சமுதாய அரசில் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மனி தநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும்,இராமநாத சட்ட மன்ற உறுப்பினருமான போராசிரியர்.முனைவர்.M.H.ஜவ ாஹிருல்லாஹ் MLA அவர்கள் உலமாக்களின் தேவையும்,சேவையும் என்ற தலைப்பிலும்,IUML மாநில தலைவர் போராசிரியர்.காதர் மொய்தீன் அவர்கள் ஷரியத் சட்டங்களும்,இந்திய சட்மும் என்ற தலைப்பிலும்,SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் ஒன்றினைவோம் வென்றிடுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா நிர்வாகிகளும்,மமக மாநில துணைத்தலைவர் பொறியாளர்.ஷபியுள்ளாஹ் அவர்களும்,தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட செயலாளர்(மமக) பைஸ் அஹமது அவர்களும்,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது அவர்களும் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும்,உறுப்பினர்கள ும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.




Category: சமுதாய செய்தி
0 comments