.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சியில் கடல்குதிரை, டைனோசர், கிளிஞ்சல்களின் படிமங்கள்!

Unknown | 8:55 PM | 0 comments


பெரம்பலூர், நவ. 13:
பெரம்பலூரில் நடைபெற்ற மா வட்ட அளவிலான அறி வியல் கண்காட்சியில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல்குதிரை, டைனோசர், கடல்நத்தை, கிளிஞ்சல்களின் படிமங் களை அமைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். இவற்றை ஆயிரக்கணக்கான மா ணவ, மாணவிகளும், பார்வையாளர்களும் கண்டு வியந்தனர்.
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை, அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பாக நடத்தப்பட்ட இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன் மை கல்விஅலுவலர் மகாலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, அனை வரு க்கும் இடை நிலை கல்வித் திட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
இக்கண்காட்சியை பெரம்பலூர் டிஆர்ஓ சுப்பிரமணியன் திறந்துவைத்து பார்வையிட்டார். இதில் பெரம்பலூர் மாவட்டத் தைச் சேர்ந்த 89 உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளின் சார்பாக 270 அறிவியல் படைப்புகள் 20 அறை களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. குறிப் பாக, ஒதியம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் அவ்வூரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளி லிருந்து சேகரிக்கப்பட்ட, பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
அதில் பெரம்பலூர் மாவட்டம்வரை வங்கக் கடல் இருந்ததற்கு அடையாளமாக பெறப்பட்ட கடல்குதிரை, டைனோசர் முட்டை, கடல்நத்தை, கிளி ஞ்சல்கள் ஆகியவற்றின் படிமங்கள் அவற்றைப் பார்வையிட்ட பல்வேறு பள்ளி மாணவ, மாண விகள் உள்ளிட்ட பார்வை யாளர் கள் பரவசம் அடை ந்தனர்.
மேலும், டெங்கு காய்ச் சலை உருவாக்க கூடிய ராட்சத கொசுக்களின் உருவங்கள், காற் றாலை மூலம் மின் உற்பத்தி, சுற்றுச்சூழல் மாசுபாட் டால் ஏற்படும் விளைவுகள், மூலிகைத் தாவரங்கள், மின்சிக்கனம், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, புவி மாசுபடாமல் காப்பதன் அவசியம், ராக்கெட் தத்துவம், பைக் திருட்டைத் தடுப்பது உள்ளிட்ட பொருட்கள் பலரையும் கவர்ந்தன. இக்கண்காட் சியை பத்துக்கும் மேற் பட்ட பள்ளிகளைச் சேர்ந் த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், பார்வையாளர்களும் கண்டு வியந்தனர்.
குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்தனர். மாலையில் நடைபெற்ற விழாவில் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகளையும், சான்றுகளையும் பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
ஒன்றியக் குழுத் தலைவர் மருதைராஜ், நகராட்சி தலைவர் ரமேஷ், ஆலம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஷ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் காமராஜ், தங்கராஜ், பள்ளித் தலைமையாசிரியை சாந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கண்டு வியப்பு
மாநில போட்டிக்குத் தகுதி
பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற படைப்புகளில் சிறந்த படைப்புக்கான முதல் 2 இடங்களைப் பெறும் பள்ளிகள், காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் தகுதி பெறுவதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1