.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு சவுதி அரேபியா உள்பட 14 நாடுகள் தேர்வு!

Unknown | 8:48 PM | 0 comments

நியூ யார்க், நவ.13-

ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் இயங்கி வருகிறது.

47 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.

உலக நாடுகளில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றதோ...? அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருவதும் இந்த கவுன்சிலின் கடமையாகும்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த கவுன்சிலுக்கான புதிய உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும்.

1-1-2014 அன்று 14 உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நாடுகளை உறுப்பினர்களாக்கும் ரகசிய தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் 16 நாடுகள் போட்டியிட்டன. ஐ.நா. சபையின் கோட்பாடுகளின் இந்த பதவிக்கு தகுதியற்ற 2 நாடுகள் புறக்கணிக்கப்பட்டன.

சீனா,ரஷ்யா,கியூபா,சவுதி அரேபியா,தென் ஆப்பிரிக்கா,அல்ஜரியா,பிரிட்டைன்,பிரான்ஸ்,மாலத்தீவுகள்,மசெடோனியா,மெக்சிகோ,மொராக்கோ,நமீபியா,வியட்நாம் ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய உறுப்பு நாடுகளாக நேற்று தேர்வு.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1