வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன், ஜகாத் பணத்தை சிறு தொழில் செய்ய ஏழைகளுக்கு வழங்கியது!
கடந்த இரண்டு ஆண்டுகளாக வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் சார்பாக அமீரக வாழ் வி.களத்தூர் மக்களிடம் ஜகாத் பணம் திரட்டி அதை வி.களத்தூரில் உள்ள ஏழை மக்களுக்கு சிறு தொழில் செய்ய கொடுத்து உதவபட்டு வருகிறது. அதே போன்று இந்த ஆண்டும் வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் சார்பாக மக்களிடம் ஜகாத் பணம திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட பணம் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைய அவர்களுக்கு சிறு தொழில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஜகாத் பவுண்டேஷனால் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிறு தொழில் செய்ய விரும்பும் ஜகாத் பணத்தை பெற தகுதியான ஏழைகள் இதற்கு விண்ணப்பம் செய்யுமாறு இரு மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் பல ஏழை மக்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பம் செய்தவர்களில் ஜகாத்தை பெரும் தகுதி உடையவர்கள் யார் என்று தேர்ந்தெடுக்கும் பனி ஜகாத் பவுண்டேஷன் சார்பாக கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது இறுதியில் இதற்கு தகுதியான 16 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ன தொழில் செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டறியப்பட்டத்தில் 8 நபர்கள் தையல் தொழில் செய்ய விரும்பியதால் அவர்களுக்கு தையல் மிஷின் தருவதாக முடிவு செய்யப்பட்டது, ஒருவர் மாவு அரைக்கும் தொழில் செய்ய விரும்பியதால் அவருக்கு கிரைண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது, மீதம் உள்ளவர்கள் சிறிய வியாபாரமாக கடைகள் வைக்க விரும்பியதால் அவர்களுக்கு தேவையான தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் அவர்களுக்கு நேற்று (8.11.2013) ஜகாத்தை தருவதாக முடிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஜகாத்தை கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மில்லத் நகர் பேஷ் இமாம் அஷ்ரப் அலி அவர்கள் கலந்துக்கொண்டு ஜகாத்தை பற்றி உரை நிகழ்த்தினார். பிறகு வி.களத்தூர் ஜகாத் பவுண்டேஷன் தலைவர் N.P.அலிராஜா அவர்கள் பேசுகையில் ஜகாத் கொடுத்து உதவிய அனைவருக்காகவும் துவா செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Category: வி.களத்தூர்
0 comments