3 நட்சத்திர அந்தஸ்துடன் தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் பெரம்பலூரில் நாளை திறப்பு விழா!
பெரம்பலூர், நவ. 6:
பெரம்பலூரில் பெருநகரங்களுக்கு இணையாக 3 நட்சத்திட அந்தஸ்துபெற்ற தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் அண்ட் மஹால் திறப்புவிழா நாளை (7ம்தேதி) நடக்கிறது.
இது தொடர்பாக தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் தாளாளர் சீனிவா சன் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் சார்பாக மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகளிர் கலைஅறிவியல் கல் லூரி, இருபாலர் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியனவும், அதில் முத்தாய்ப்பாக பெரம்பலூர் சிறுவாச்சூர் இடையே அதிநவீன மருத்துவமனையுடன் இணைந்த தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகி யன தொடங்கப்பட்டு கல்விப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. பின்தங்கிய மாவட்டத்தில் பொருளா தார ரீதியில் மக்கள் வளம் பெற ஏதுவாக தொடங்கப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் மற்றொரு படைப்பாக, பெருநகரங்களுக்கு இணையான 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல்ஸ் அண்ட் மஹால் கட்டப்பட்டுள்ளது. பெரம்பலூர் பாலக்கரையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இதன் திறப்புவிழா நாளை (7ம்தேதி) நடக்கிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட தங்கும் அறைகளுடன், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காகவும், வரவேற்புவிழா உள்ளிட்ட பல தரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவான பிரமாண்ட மஹாலும் திறக்கப்படவுள்ளது. திருச்சி மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணி தலைமை வகித்து ஹோட்டல் மற்றும் மஹாலை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஹோட்டலில் குழந்தைகள் பூங்கா, ரெஸ்டாரண்டு, பீசாநெட், டீலக்ஸ், ஸ்டா ண்டட் ரூம்கள் ஆகியவை உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
![]() |
Category: மாவட்ட செய்தி
0 comments