மலரும் இஸ்லாமிய புத்தாண்டு-1435.

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி 1435 முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த திருத் தூதுக்காகவும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத், ‘துறந்து செல்லல்’ என்ற பொருளை தாங்கி நிற்கும் இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது நாட்டையும், வீட்டையும், சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும்’ என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.
‘ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அந்த வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லா வித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்’ இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.
ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை.
பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ஸல்) அவர்களும், குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.
இன்றும் அந்தப் பயண வேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ்வகிலத்தைச் செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கின்றது.
இஸ்லாமிய மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹ் தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மூன்றுடன் இஸ்லாமிய புது வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும், ஆனால் இந்த நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும் தான் ‘புனிதம்’ என்ற பொருளைத் தாங்கியுள்ளது. இது ஏது என்று நோக்கினால் உலகத்தில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் பத்தாம் நாளில்தான் நிகழ்ந்துள்ளன. வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றைப் படைத்தது இந்நாளில் தான். அறை அறிவிப்புப் பகை, இறை எழுதுகோல் ஆகியவற்றைப் படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தைப் படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகிய அஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது முக்கியமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோக்கம் படி ஏவினார்கள். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் அவர்களிடம் அஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப்பரிகாரமாகும். (ஆதாரம் : முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தைப் பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கு தோறும் துக்கம் மேலிடுகிறது. கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான் இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே அஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60ல் ஷாஹத்தின் பானத்தைப் பருகினார்கள். யதீதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது தேரவைக் கொடுக்க முன்வரவில்லை.
அநீதிக்குத் தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் ‘ஷஹாதத்’ சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹம்ரம் பத்தாம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இது தான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே, உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.
மெளலவி
எம். யூ. எம். வாலிஹ் (அல் அஸ்ஹரி)
வெலிகம.
எம். யூ. எம். வாலிஹ் (அல் அஸ்ஹரி)
வெலிகம.
Category: முஸ்லிம்
0 comments