.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வீட்டு வரி நிர்ணயம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் நகராட்சி ஊழியர் கைது!

Unknown | 8:11 PM | 0 comments

வீட்டு வரி நிர்ணயம் செய்ய
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் நகராட்சி ஊழியர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்

பெரம்பலூர், நவ.7-

பெரம்பலூரில், வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நகராட்சி ஊழியர்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த பழனியாண்டி(வயது 44) என்பவர் வருவாய் பிரிவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 இவரிடம் பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரர் மாதவன், ஏற்கனவே கட்டிட வரைபட அனுமதி பெற்று புதிதாக கட்டியுள்ள 2 மாடி கட்டிடத்திற்கு வீட்டு வரித்தொகையை நிர்ணயம் செய்து ரசீது வழங்குமாறு கேட்டார். அதற்கு பழனியாண்டி, ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தருமாறு மாதவனிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து பழனியாண்டியை கையும், களவுமாக பிடிக்க முயன்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், மாதவனிடம் ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை பழனியாண்டியிடம் கொடு க்குமாறு கூறினார்கள்.

கைது

போலீசாரின் திட்டப்படி நேற்று பகல் 11.45 மணி அளவில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற ஒப்பந்தக்காரர் மாதவன், ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை நகராட்சி ஊழியர் பழனியாண்டியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், அழகுமலை, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பழனியாண்டியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலக பிரதான வாயிலின் கதவை அடைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஊழியர்களிடம் பதட்டம் ஏற்பட்டது. நகராட்சி வரிவசூல் செய்யும் பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

கைதான பழனியாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1