V.களத்தூரில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை, மே 8:
வேப்பந்தட்டை அருகே V.களத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா V.களத்தூர் கிராமத்தில் 3500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லாற்றில் போர்வெல் அமைத்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் மின்தடை காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் வி.களத்தூர் கிராமத்தில் 2 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் நூருல்ஹூதா இஸ்மாயில் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு புகார் தெரிவித்தும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வி.களத்தூர் பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் சாலையில் வி.களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நேற்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தவலறிந்த வி.களத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் நூருல்ஹூதா இஸ்மாயில், கவுன்சிலர் சங்கீதா செந்தமிழ்செல்வன், விஏஓ ஜெயராமன் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் V.களத்தூர் பெரம்பலூர்& கை.களத்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Thanks : dinakaran.com
Thanks : dinakaran.com
Category: உள்ளுர் செய்தி
0 comments