பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தைத் தொடங்க SDPI வலியுறுத்தல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில்போடப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் அரசியல் எழுச்சிப் பேரணி, மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஏ. முகமது ரபீக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் ஏ. சித்திக்பாட்ஷா, ஏ. இதயத்துல்லா, பாப்புலர் பிரண்ட்ஸ் இந்தியா அமைப்பு மாவட்டச் செயலர் வி. முஜிபுர் ரஹ்மான், நகரத் தலைவர் ஏ. அகமது இர்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி, மாநிலப் பொதுச்செயலர் பி. அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. அபுபக்கர் சித்திக், கே. பாத்திமாகனி, திமுக மாவட்டச் செயலர் பா. துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் வீர. செங்கோலன், ஜக்கிய ஹமாத் தலைவர் எஸ். சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பெரம்பலூர் - ஆத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில்போடப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைக்கான நவீன கருவிகள், மருத்துவர்களை நியமித்து முழு வசதி பெற்ற மருத்துவமனையாக்க வேண்டும்.
V.களத்தூர் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜமாத் தலைவர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, வடக்குமாதவி சாலையில் தொடங்கிய பேரணி காமராஜர் வளைவு, பாலக்கரை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில் மாவட்டத் துணை தலைவர் ஏ. சாகுல் அமீது, மாவட்டப் பொதுச் செயலர் எப். சர்தார் பாஷா, நிர்வாகிகள் ஏ. சாகுல் ஹமீது, எúஸ. தவ்பிக், ஏ. முகம்மது சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் எம். அபுபக்கர் சித்திக் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. காஜாஷரிப் நன்றி கூறினார்.





Category: மாவட்ட செய்தி
0 comments