+2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 90.59% தேர்ச்சி.ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்.
பெரம்பலூர்: மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்த ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பள்ளிகளை சேர்ந்த 4,045 மாணவர்கள், 3,799 மாணவிகள் சேர்த் து மொத்தம் 7,844 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 7,101 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இது 90.59 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 84.42 சதவீதமாகும், கடந்த ஆண்டைவிட 6.17 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகள் 81.59 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.76 சதவீதம் கூடுதலாகும். மெட்ரிக் பள்ளிகள் 98.43 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் அளவில் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ரஞ்சித் 1,114 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியா 1,112 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோபியா 1,091 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
*பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளி செஞ்சுரி: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 52 பேரும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 27 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 1,000 க்கு மேல் 837 பேரும், 1,100க்கு மேல் 321 பேரும் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளி செஞ்சுரி: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 52 பேரும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 27 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 1,000 க்கு மேல் 837 பேரும், 1,100க்கு மேல் 321 பேரும் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெரம்பலூர்: மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்த ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பள்ளிகளை சேர்ந்த 4,045 மாணவர்கள், 3,799 மாணவிகள் சேர்த் து மொத்தம் 7,844 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 7,101 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இது 90.59 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 84.42 சதவீதமாகும், கடந்த ஆண்டைவிட 6.17 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளிகள் 81.59 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.76 சதவீதம் கூடுதலாகும். மெட்ரிக் பள்ளிகள் 98.43 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் அளவில் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ரஞ்சித் 1,114 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியா 1,112 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சோபியா 1,091 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
*பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளி செஞ்சுரி: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 52 பேரும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 27 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 1,000 க்கு மேல் 837 பேரும், 1,100க்கு மேல் 321 பேரும் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்....
பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா தமிழ்-195, ஆங்கிலம்-193, இயற்பியல்-194, வேதியியல்-200, உயிரியியல்-200, கணிதம்-198 என மொத்தம் 1,180 மதிப்பெண்கள் பெற்று பெரம்பலூர் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரகாஷ் தமிழ்-194, ஆங்கிலம்-190, இயற்பியல்-194, வேதியியல்-199, உயிரியல்-198, கணிதம்-200, ஸ்ரீசாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி தமிழ்-195, ஆங்கிலம்-185, இயற்பியல்-195, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-200, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாரதிக்கண்ணன் தமிழ்-195, ஆங்கிலம்-190, இயற்பியல்-195, வேதியியல்-200, உயிரியல்-195, கணிதம்-200 ஆகியோர் 1,175 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்னேஷ் தமிழ்-193, ஆங்கிலம்-187, இயற்பியல்-197, வேதியியல்-200, உயிரியல்-198, கணிதம்-199 என மொத்தம் 1,174 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பார்வையற்ற மாணவி வரலாறு பாடத்தில் மாநிலத்தில் 2ம் இடம்.
![]() |
கலைமணி |
ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அன்னை ஈவா மேரிகோக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பார்வையற்ற மாணவி கலைமணி தமிழ்-185, ஆங்கிலம்-179, வரலாறு-200, பொருளாதாரவியல்-198, வணிகவியல்-200, கணக்குப்பதிவியல்-186 என மொத்தம் 1,148 மதிப்பெண் பெற்று வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் மாநில அளவில் இரண்டாமிடம் பெற் று சாதனை படைத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 16 பள்ளிகள் 100% தேர்ச்சி.
பிளஸ் 2 தேர்வு முடிவில் 16 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பெரம்பலூர் மாவட்ட அளவில் மேலப்புலியூர், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் ஸ்ரீராகவேந்திர மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, துறைமங்கலம் ஈவா மேரிகோக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பாளையம் எம்ஆர்வி மேல்நிலைப்பள்ளி ஆகிய 16பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
Category: மாவட்ட செய்தி
0 comments