புஷ்ரா நல அறக்கட்டளையின் இப்தார் நிகழ்ச்சி
”பரவாயில்லைப்பா நான் இந்தளவுக்கு நம்ம ஊர் மக்கள் இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்கலை பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சிப்பா” என்று சந்தோஷப்பட்டார்கள் நமதூர் புஷ்ரா நல அறக்கட்டளையின் இப்தார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர்.
நேற்று (26.08.2011) மாலை துபை டேராவில் உள்ள பிஸ்மில்லா ரூம் மாடியில் இப்தார் நிகழ்ச்சியை புஷ்ரா நல அறக்கட்டளை நடத்தியது. இதில் கலந்துக்கொண்டவர்கள் மேற்சொன்னவாறு பாராட்டினார்கள்.
இந்த இப்தார் நிகழ்ச்சியைப்பற்றி புஷ்ராவின் செய்தி தொடர்பாளர் சகோதரர் எ. சேக் தாவுது அவர்கள் கூறும் போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நமதூர் மக்களும் மற்றும் நம் அழைப்பை ஏற்று மற்ற ஊர் சகோதரர்களும் இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அதாவது நாங்கள் 100 பேர் வரை கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் சுமார் 140 பேர் வரை கலந்துக்கொண்டு சிறப்பித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு இலாஹி ரூம் வாசிகளின் பங்களிப்பு மிகவும் உறுதுணையாக இருந்தது. எங்களின் அழைப்பை ஏற்று வருகைப்புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் புஷ்ராவின் சார்பாக நன்றியை கூறினார் எ. சேக் தாவுது. நமதூர் மக்களின் 35 வருட அமீரக வாழ்க்கையில் ஒரு நல அறக்கட்டளையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய முயற்சிக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் விகளத்தூர் டாட் காம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Category: துபாய்

0 comments