புஷ்ரா சேவை அறக்கட்டளையின் இப்தார் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வரும் 26.08.2011 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நிகழ்ச்சியை துபையில் நடத்த உள்ளதாக புஷ்ரா சேவை அறக்கட்டளை அறிவித்துள்ளது. துபை டேராவில் உள்ள பிஸ்மில்லா ரூம் மாடியில் இந்த புனிதமிக்க நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் எ. சேக் தாவுது கூறினார்கள்.அமீரகத்தில் வாழும் நமதூர் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் இந்த இப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில் இந்த செய்தியை காணும் அனைவரும் தங்களுக்கு தெரிந்த நமதூர் நன்பர்களுக்கு எடுத்துக் கூறுமாறும் அவர்களையும் அழைத்து வருமாறும் கேட்டுக்கொண்டார்.
Category: துபாய்

0 comments