துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் மார்ச் மாதந்திர பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது.
துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் மார்ச் மாதந்திர பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது.
8-3-13 அன்று மாலை 7:30 மணி அளவில் துபாய் டேராவில் உள்ள அல்காமிஸ் உணவகத்தின் மாடியில் புஷ்ரா நல அறக்கட்டளையின் மார்ச் மாதந்திர பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது .
K . அப்துல் ஹக்கீம் தலமையும், A. அப்துல் சலாம் . A.ஷேக் தாவுத். மற்றும் S .நூர் முஹம்மது,A .ஷபியுல்லா முன்னிலையில் நடைப்பெற்றது.
20க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ......
உறுப்பினர்களில் பழைய சந்தா பாக்கி அனைத்தும் விரைவில் வசூல் செய்ய தீர்மானிக்கப்பட்டது .
V .களத்தூர் 2012ம் ஆண்டு ஆடிட்டிங் விரைந்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது .
புஷ்ரா நல அறக்கட்டளையின் வைப்பு நிதி பற்றி அதன் பொறுப்பாளர் அப்துல் ரஹ்மானிடம் விளக்கம் கேட்டப்பட்டது .
புஷ்ரா வளர்ச்சி குழுவிடம் புதிய திட்டம் மற்றும் புஷ்ரா வளர்ச்சிக்கு செய்த பணிகள்
பற்றி குறித்து அறிக்கை அடுத்த மாதம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது .
V .களத்தூரில் வட்டி இல்லா கடன் திட்டதிற்கு விரைவில் பணம் அனுப்பி அங்கு
உள்ள பற்றக்குறையை விரைவில் சரி செய்ய தீர்மானிக்கப்பட்டது .
V ,களத்தூரில் விரைவில் புஷ்ரா மகளிர் குழு அடுத்த 3 அல்லது 4 மாதம் கழித்து
ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது .
V .களத்தூர் -மில்லத் நகர் வசிக்கும் S .சையது முஸ்தபா விற்கு , அவரின் வீடு கட்ட 5000 நிதி உதவி அனுப்ப தீர்மானிக்கப்பட்டது .
புஷ்ரா நல அறக்கட்டளையின் வலைத்தளம் விரைவில் வர
இருப்பதாக தலைவர் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார் ......
Category: துபாய்

0 comments